Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘கெவி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

ஷீலா, ஜாக்குலின் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கெவி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
07:22 PM Jul 06, 2025 IST | Web Editor
ஷீலா, ஜாக்குலின் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கெவி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
Advertisement

ஆத்யக் புரடக்சன்ஸ் சார்பில் கவுதம் சொக்கலிங்கம் தயாரிக்கும் படம் 'கெவி'. இப்படத்தை தமிழ் தயாளன் இயக்குகிறார். இதில் அறிமுக நடிகர் ஆதவன் நாயகனாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் ஷீலா ராஜ்குமார், ஜாக்குலின் உட்பட பலர் நடிக்கின்றனர். ராசி தங்கதுரை வசனம் எழுதும் இந்தப் படத்துக்கு ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு செய்கிறார். பாலசுப்பிரமணியன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் அருகே நடைபெற்றது.

Advertisement

இப்படத்திற்காக இதன் இயக்குநர் 3 வருடங்களாக மலைக்கிராம மக்களுடன் வாழ்ந்து இந்தக் கதையை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் மலைக்கிராம மக்கள் குறித்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதில், மூதாட்டி ஒருவர் கதை கூறுவதை போல் அமைந்துள்ளது. நடிகை ஷீலா ராஜ்குமாருக்கு பிரசவ வலி வர மக்கள் அவரை தூக்கிக்கொண்டு செல்கின்றனர்.

மறுபக்கம் கதாநாயகனை சிலர் தாக்குகின்றனர். அதே நேரத்தில் ஷீலா ராஜ்குமாருக்கு குழந்தை பிறக்கிறது. இவை முழுதும் இரவு நேரத்தில் நடப்பதை போன்று அமைந்துள்ளது. ஜாக்குலினும் இந்த காட்டுப்பகுதிக்கு வருகிறார். சாலை மோசமாக இருப்பதாக கூறுகிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

Tags :
AadhavanGeviGevi TrailerJacquelinemovieSheelatamil cinemaTrailer
Advertisement
Next Article