Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"அந்த பொண்ணு என் உசுரு.. என் மூச்சு.. " வெளியானது ரத்னம் படத்தின் டிரெய்லர்!

07:19 PM Apr 15, 2024 IST | Web Editor
Advertisement
இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த ரத்னம் படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

இயக்குனரான ஹரி கடைசியாக யானை திரைப்படத்தை இயக்கி இருந்தார்.  இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில்,  அடுத்ததாக நடிகர் விஷாலை வைத்து ரத்னம் எனும் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.  இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து இருக்கிறார்.

Advertisement

இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில்,  வரும் 26-ம் தேதி படம் வெளியாக உள்ளது.   இத்திரைப்படத்தில் ராமச்சந்திர ராஜூ, சமுத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.  இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு படத்தின் பாடலான 'டோண்ட் வரி டா மச்சி' மற்றும் 'எதனால' பாடல் வெளியானது.  வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த நிலையில், இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

Tags :
Devi Sri Prasadpriya bhavani shankarRathnamRathnam Trailervishal
Advertisement
Next Article