Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்தின் டிரெய்லர் வெளியானது!

09:26 PM May 25, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் மோகன் நடித்துள்ள ஹரா படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Advertisement

'மூடுபனி' படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன். இந்த படத்தை தொடர்ந்து, கிளிஞ்சல்கள். பயணங்கள் முடிவதில்லை. கோபுரங்கள் சாய்வதில்லை, இதய கோவில், உதயகீதம், பிள்ளைநிலா. 100- வது நாள் என பல வெற்றிப்படங்களில் நடித்தார்.

தற்போது 14 வருடங்களுக்குப் பிறகு திரையுலகுக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ‘தாதா 87’, ‘பவுடர்’ படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் ஹரா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், சாருஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு லியாண்டர் லீ மார்டி இசையமைத்துள்ளார். இந்த படத்தை, கோயம்புத்தூர் மோகன் ராஜ், ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கடந்த மாதம் நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

Tags :
CharuhasanHaraaMohanTrailerYogibabu
Advertisement
Next Article