Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மம்முட்டி நடித்த 'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியானது!

09:16 PM Jan 08, 2025 IST | Web Editor
Advertisement

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள 'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியானது.

Advertisement

கேரள திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி . இவர் இதுவரை ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான 'டர்போ' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து , மம்முட்டி 'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இதில் லீனா,சித்திக், கோகுல் சுரேஷ்,விஜய் பாபு,விஜி வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைக்கும் இப்படத்திற்க்கு விஷ்னு தேவ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி தொடர்பான கதைக்களத்தில் உருவாகி உள்ளது.

சமீபத்தில் தான் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, இப்படம் வருகிற 23- ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லரை மம்முட்டி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Tags :
Actor MammoottyDominic and the Ladies purseGautham vasudev menonGokul SureshLenaNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article