Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படத்தின் ட்ரெய்லர்!

01:54 PM Jul 08, 2024 IST | Web Editor
Advertisement

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

Advertisement

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வணங்கான்'. இந்த படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்த நிலையில் ஏதோ ஒரு காரணத்தினால் அவரால் நடிக்க முடியவில்லை அவருக்கு பதிலாக அருண் விஜயை வைத்து படத்தை இயக்கி முடித்துள்ளார் பாலா.

ஒரு கையில் பெரியார் சிலை மறு கையில் விநாயகர் சிலை என பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே கவனத்தை ஈர்த்த வணங்கான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. அதற்கு முக்கிய காரணம் பாலாவின் பிதா மகன் விக்ரம் சாயலில் அருண் விஜய் இருந்ததே ஆகும். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வணங்கான் படமாக்கப்பட்டது. படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இதுக்குறித்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Tags :
Arun VijayBalaVanangaan
Advertisement
Next Article