Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”2K லவ் ஸ்டோரி” படத்தின் டிரெய்லர் வெளியானது!

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ”2கே லவ் ஸ்டோரி” படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.
08:19 PM Jan 22, 2025 IST | Web Editor
Advertisement

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ,சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் நவீன இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் " 2K லவ் ஸ்டோரி” .

Advertisement

இப்படத்தில் கதாநாயனாக ஜெகவீர் அறிமுகமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் , பால சரவணன் , ஆண்டணி பாக்யராஜ் ,ஜெயபிரகாஷ், சிங்க முத்து , ஜிபி முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு ஆனந்த கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

2K தலைமுறையின் காதல், நட்பு என அவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக இப்படம் உருவாகி உள்ளது. மேலும், வெட்டிங் போட்டோகிராபி எடுக்கும் இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது.இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை இன்று நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி ஆகியோர் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டனர்.

Tags :
2K Love StoryBala SaravananJagaveerMeenakshi GovindarajanNews7Tamilnews7TamilUpdatesSuseenthiranTrailer
Advertisement
Next Article