’தி பாய்ஸ்’ தொடரின் கடைசி பாகத்தின் டிரெய்லர் வெளியீடு...!
கார்த் என்னிஸ் மற்றும் டாரிக் ராபர்ட்சன் ஆகியோரால் எழுதப்பட்ட காமிக் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இணையத்தொடர் தி பாய்ஸ். சூப்பர் ஹீரோக்கல் என்றாலே நல்லவர்கள் என்ற பிம்பத்தை மாற்றி, நல்லவர்களாக நடிக்கும் சூப்பர் ஹீரோக்களின் கெட்ட பக்கங்களையும் அதனால் பாதிக்கப்பட்டு அவர்களை எதிர்க்கும் சாமானியவர்களையும் பற்றியதே இந்த ’தி பாய்ஸ்’ தொடரின் கதை.
அதிலும் சூப்பர் ஹீரோக்களின் தலைவனாக இருக்கும் ஹோம்லாண்டருக்கும் சாதரண மக்களின் தலைவனாக உள்ள பில்லி புட்சருக்கும்மான பகைமை இரு கதாபத்திரங்களுக்கும் பெரும் அளவிலான ரசிகர் பட்டாளத்தை உருவாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் வெளியாகிய இத்தொடரின் முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக இத்தொடரின் 4 பாகங்கள் வெளியாகியுள்ளன. ’தி பாய்ஸ்’ தொடரின் 5 ஆவது மற்றும் கடைசி பாகம் அடுத்தாண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது.