Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரபு தேவா நடிக்கும் 'பேட்ட ராப்' திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

06:15 PM Jun 22, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட ராப் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Advertisement

நடன இயக்குநராக இருந்து நடிகர், இயக்குநர் என பாலிவுட் வரை வெற்றிகரமாக வலம் வருபவர் பிரபு தேவா. தமிழில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பொய்க்கால் குதிரை, பாகீரா ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது விஜய்யின் ‘கோட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மலையாள இயக்குநர் எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘பேட்ட ராப்’ .  அதேநேரம், நாயகனாக  'மூன் வாக்' திரைப்படத்திலும் பிரபுதேவா நடிக்கிறார்.  ‘பேட்ட ராப்’ திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை வேதிகா நடித்துள்ளார்.  புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள் : மத்திய நிதிநிலை அறிக்கை தயாரிப்பு – மாநில நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை!

மேலும், விவேக் பிரசன்னா,  பகவதி பெருமாள்,  ரமேஷ் திலக்,  கலாபவன் ஷாஜோன்,  மைம் கோபி,  ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும், பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இந்நிலையில், ‘பேட்ட ராப்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதால் திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Tags :
#cinemaupdatesDevikamoviePetaRaabPrabhuDevaRelease
Advertisement
Next Article