Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புதிய போஸ்டரை வெளியிட்டு அப்டேட் கொடுத்த ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படக்குழு!

01:46 PM Aug 30, 2024 IST | Web Editor
Advertisement

தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 'Golden Sparrow' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

'பவர் பாண்டி' திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான தனுஷ், ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தனது 50-வது படமான ‘ராயன்’ திரைப்படத்தை தானே இயக்கி நடித்தார். ‘ராயன்’ திரைப்படம் ரூ.100 கோடி வரை வசூலித்து பெரிய வெற்றிப்படம் ஆனது. ராயன் படத்தைத் தொடர்ந்து, தனுஷின் இயக்கத்தில் உருவாகி வரும் மூன்றாவது திரைப்படம்  ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதில், தனுஷின் சகோதரி மகன் நாயகனாக அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், ரபியா காடூன், பவிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் இளம் தலைமுறையின் காதலைப் பேசும் படமாக உருவாகி வருகிறது. இதற்கிடையே, இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை தனுஷின் மூத்த மகன் யாத்ரா எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படியுங்கள் : Tiruchendur ஆவணித் திருவிழா! வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி!

இந்நிலையில் இத்திரைப்படத்தின் முதல் பாடலான, கோல்டன் ஸ்பேரோ பாடல் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இப்பாடலை அறிவு எழுத, சுப்புலட்சுமி, ஜி.வி.பிரகாஷ், தனுஷ், அறிவு உள்ளிட்டோர் பாடியுள்ளனர். இந்நிலையில், தற்போது கோல்டன் ஸ்பேரோ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Tags :
Dhanushfirst singleGoldenSparrowGVPrakashNilavukkuEnmelEnnadiKobam
Advertisement
Next Article