மலேசியாவில் வகுப்பறையை அலங்கரித்து கவனத்தை ஈர்த்த ஆசிரியர்!
மலேசியாவில் ஆசிரியர் ஒருவர் தனது போனஸில் வகுப்பறை முழுவதையும் சீரமைத்து, மாணவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துள்ளார்.
ஆசிரியர்கள் பலர் மாணவர்களுக்கு பல உதவிகளை செய்து வருவதை கேள்விபட்டிருக்கிறோம். ஏழ்மையில் உள்ள மாணவர்களை படிக்க வைப்பது. அவர்களுக்கு சீறுடை வாங்கி தருவது. சாப்பிடுவதற்கு காசு தருவது போன்ற பல உதவிகளை செய்து கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் மலேசியாவில் கமல் டார்வின் என்ற ஆசிரியர் ஒருவர், தான் வேலைபார்க்கும் பள்ளியில், வகுப்பறையில் மாணவர்களுக்கு தேவையான மேசை, நாற்காலி போன்ற அனைத்து பொருட்களையும் வாங்கி வைத்துள்ளார். மேலும் வகுப்பறை முழுவதையும் சீரமைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;
“2K போனஸ் எங்கே போனது? நான் உங்களுக்குச் சொல்ல வந்திருக்கிறேன் என குறிப்பிட்டு வகுப்பறையின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். எனக்கும் மாணவர்களுக்கும் எளிமையாகவும், வசதியாகவும் இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். இதற்காக பள்ளியின் நிர்வாகி மற்றும் பெற்றோரிடம் அனுமதி பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
“முழு செயல்முறையையும் முடிக்க ஒரு வாரம் ஆனது. மற்ற ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பெற்றோர்களும் உதவினார்கள். நான் தனியாக செய்யவில்லை. இது எனது பணியின் விளைவு மட்டுமல்ல, பெற்றோர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் மூத்த ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் யோசனைகளை வழங்கியதன் விளைவாகும். இந்தப் பள்ளிக்கு வந்து 3 மாதங்களே ஆன போதும் என் உழைப்பின் பலன் இது! கடவுள் நாடினால், எனக்கு ஒரு பணி கிடைத்தால், எதிர்காலத்தில் என்னால் முடிந்தவரை செய்வேன்,'' என குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.