வீட்டுப் பாடம் முடிக்காத மாணவரின் பல்லை உடைத்த ஆசிரியர் கைது!
வீட்டுப் பாடம் முடிக்காத மாணவரின் பல்லை உடைத்து கடுமையாக தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன், வீட்டுப்பாடம் செய்யாததால், ஆசிரியர் கடுமையாக தாக்கியதில், அவரது பல் உடைந்தது மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் கோடை விடுமுறைக்கு முன்பு வீட்டுப் பாடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விடுமுறை முடிந்து செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு திரும்பிய மாணவரிடம் அறிவியல் ஆசிரியர் முகமது ஆசிஃப், வீட்டுப் பாடங்களை கேட்டுள்ளார். மாணவன், வீட்டுப்பாடம் செய்யாததால், ஆசிரியர் கடுமையாக தாக்கியதில், அவரது பல் உடைந்தது மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஆசிரியர் முகமது ஆசிஃப் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுபற்றி சக மாணவர்கள் தலைமை ஆசிரியருக்கு தகவல் அளித்ததையடுத்து,காயமடைந்த மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, மாணவரின் பெற்றோர் அளித்த புகாரை தொடர்ந்து ஆசிரியர் ஆசிஃபை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த மாணவர் ஒரு நாள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.