Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருத்தணி சந்தைக்கு ’பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி’ எனப் பெயரிட தமிழ்நாடு அரசு முடிவு!

திருத்தணி சந்தைக்கு 'பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி’ எனப் பெயரிட தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.
05:04 PM Mar 10, 2025 IST | Web Editor
Advertisement

திருத்தணி நகராட்சிக்கு சொந்தமான சந்தைக்கு   ‘பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி’ என்று பெயரிட தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக திருத்தணி நகராட்சி நிர்வாக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  “திருவள்ளூர் மாவட்டம். திருத்தணி நகராட்சி ம.பொ.சி சாலையில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான காமராஜர் நாளங்காடி 81 கடைகளுடன் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. பழைய மார்க்கெட் தற்போதைய மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லாததாலும், சிதிலமடைந்து மோசமான நிலையில் இருந்ததாலும், பழைய கட்டிடத்தினை இடித்து, அப்புறப்படுத்தி 97 கடைகளுடன் புதியதாக நாளங்காடி கட்டுவதற்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை எண்.(4D) 35, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 18.08.2023 வெளியிடப்பட்டது.

அதன்படி, கட்டப்படும் நாளங்காடியின் அனைத்து பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன. புதியதாக கட்டப்பட்டுள்ள நாளங்காடிக்கு  ‘பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி’ என்று பெயரிட தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருத்தணி சந்தைக்கு கலைஞர் நூற்றாண்டு சந்தை என்று பெயர் மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என பாமக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags :
MARKETThiruttaniTNGovt
Advertisement
Next Article