ஆப்கனில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை விதித்த தாலிபன் அரசு!
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று ஆப்கானிஸ்தான். அங்கு கடந்த 2021 முதல் தாலிபன் ஆட்சி நடைபெற்று வருகிறது. தாலிபன் ஆட்சியில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் வித்திக்கப்படுவதாக் குற்றச் சாட்டு இருந்து வருகிறது.
இந்த நிலையில் தாலிபன் அரசானது, தாலிபன் கொள்கைகள் மற்றும் ஷரியத் சட்டங்களுக்கு எதிராக உள்ளதாகக் கூறி பெண்கள் எழுதிய 140 புத்தகங்கள், ஈரானிய எழுத்தாளர்களின் 310 புத்தகங்கள் என 680 புத்தங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஷரியத் கொள்கைகளுக்கு முரணாக கருதப்பட்டதால், பல்கலைக்கழக பாடத்திட்டத்திலிருந்து 18 பாடங்களையும் அரசாங்கம் நீக்கியுள்ளது. அவற்றில் பாலினம் மற்றும் மேம்பாடு, தகவல் தொடர்புகளில் பெண்களின் பங்கு மற்றும் பெண்கள் சமூகவியல் போன்ற பாடங்கள் பெண்களை மையமாகக் கொண்ட பாடங்களாகும்.
இந்த தடை உத்தரவுக்கு எத்ரிப்பு தெரிவித்துள்ள ஆப்கன் கல்வியாளர்கள். அரசின் இந்த முடிவானது ஆப்கன் கல்வி வளர்ச்சியில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
முன்னதாக இந்த வார தொடக்கத்தில் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குண்டுஸ், படாக்ஷன், பாக்லான், தகார் மற்றும் நங்கர்ஹார்ஆகிய ஐந்து மாகாணங்களில் வைஃபை இணைய சேவைகள் துண்டிக்கப்படுவதாக, தாலிபன் அரசாங்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.