Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#INDvsSA | இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டியில் இன்று மோதல்!

06:43 AM Nov 08, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான டி20 தொடர் இன்று தொடங்குகிறது.

Advertisement

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. தொடர்ந்து 2, 3 மற்றும் 4வது ஆட்டங்கள் நவ.10, 13, 15 தேதிகளில் நடைபெற உள்ளன. இந்த தொடருக்கான இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து திடீரென விலகிய வங்கதேச மூத்த வீரர்! ஏன் தெரியுமா?

இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப்சிங் போன்ற அனுபவ வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதையடுத்து, எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், ரீசாஹென்ரிக்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், ஐபிஎல் ஏலம் வரவுள்ளதால் இந்த தொடரில் அசத்தும் வீரர்கள் கூடுதல் தொகைக்கு ஏலம் போல வாய்ப்புள்ளது. அந்த வகையிலும் வீரர்களுக்கு இந்த தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி :-

மார்க்ரம் (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்சே, டொனோவன் பெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், பேட்ரிக் க்ரூகர், கேசவ் மஹாராஜ், டேவிட் மில்லர், மிஹ்லாலி மபோங்வானா, நகாபா பீட்டர், ரியான் ரிக்கெல்டன், அண்டில் சிமெலேன், லூத்தோ சிபம்லா (3வது மற்றும் 4வது டி20), மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

இந்திய அணி :-

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், திலக் வர்மா, ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ரமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக், அவேஷ் கான், யாஷ் தயாள்.

Tags :
IndiaIndVsSANews7Tamilnews7TamilUpdatesSouth AfricaT20 Series
Advertisement
Next Article