Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பதஞ்சலி விளம்பர விவகாரம்! வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்!

01:44 PM Aug 13, 2024 IST | Web Editor
Advertisement

பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை வெளியிடாது என்று உறுதி அளித்த நிலையில் வழக்கை உச்சநீதிமன்றம் இன்று முடித்து வைத்தது.

Advertisement

பிரபல யோகா குரு பாபா ராம்தேவியின் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு,  எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில்,  இந்த  நிறுவனம் அலோபதி மருத்துவத்தின் தரத்தை சீர்குலைக்கும் வகையில் விளம்பரம் செய்வதாக குற்றம்சாட்டி இந்திய மருத்துவ சங்கம் வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரத்தில், கொரோனாவை கரோனில் மருந்து குணமாக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருப்பதாகவும், இதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணையின் போது, எந்தவொரு மருத்துவ முறைக்கு எதிராக கருத்து தெரிவிக்கக் கூடாது எனவும், மருந்துகள் குறித்த தவறான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்றும் பதஞ்சலி நிறுவனத்துக்கு கடந்த நவம்பரில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி பதஞ்சலி தொடர்ந்து விளம்பரங்களை வெளியிட்டதால், பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. மேலும், தவறான விளம்பரம் கொடுத்தது குறித்து மன்னிப்பு கோரி நாளிதழ்களில் விளம்பரம் அளிக்க பாபா ராம்தேவுக்கு உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மன்னிப்பு கோரி பாபா ராம்தேவ் தரப்பில் கடந்த ஏப்ரல் மாதம் நாளிதழ்களில் விளம்பரம் அளிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : “இந்தியாவின் கல்வி மையமாக தமிழ்நாடு தொடர்ந்து ஜொலிக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

இனிமேல் தவறான விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என்று பாபா ராம்தேவும், பதஞ்சலி ஆயுர்வேத நிறுவன நிர்வாக இயக்குநர் பாலகிருஷ்ணாவும் உறுதி அளித்தனர்.  இதனைத் தொடர்ந்து, அலோபதி மருத்துவம் குறித்து தவறான விளம்பரம் வெளியிட்டதாக பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மீது தொடரப்பட்டிருந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று முடித்து வைத்தது.

Tags :
AcharyaBalakrishnaAllopathiBabaRamdevCoronaCovid19DelhiHighcourtmedicinesPatanjaliAdsCase
Advertisement
Next Article