Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"உச்சநீதிமன்றம் ஒன்னும் காபி ஷாப் இல்லை" - வழக்கறிஞரை கண்டித்த தலைமை நீதிபதி!

09:58 PM Sep 30, 2024 IST | Web Editor
Advertisement

உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையின் போது  'யா...யா...' என்று கூறிய வழக்கறிஞரை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கண்டித்தார்.

Advertisement

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் வழக்கு விசாரணை ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது, 'இந்திய முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக உள் விசாரணை நடத்த வேண்டும்' என்று வழக்கறிஞர் கோரினார். இதற்கு, 'இது ஒரு சட்டப்பிரிவு 32 மனுதானா? நீதிபதியை எதிர்மனுதாரராக வைத்து நீங்கள் எப்படி பொதுநல மனுவை தாக்கல் செய்யலாம்' என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கேட்டார்.

இதற்கு பதில் அளிக்கும் போது, வழக்கறிஞர், 'யா...யா...' (yeah) என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தினார். இதனைக் கேட்ட தலைமை நீதிபதி சந்திரசூட் கோபமடைந்தார். உடனடியாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "இது காபி ஷாப் இல்லை! இது என்ன யா...யா... இந்த வார்த்தை எனக்கு அலர்ஜி. ஆம் என்று சொல்லிப்பழகுங்கள்" என கோபத்துடன் தெரிவித்தார்.

மேலும், "ரஞ்சன் கோகோய் இந்த நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாக இருந்தவர். நீதிபதிக்கு எதிராக இதுபோன்ற மனுவை நீங்கள் தாக்கல் செய்ய முடியாது. உள் விசாரணையை நீங்கள் கேட்க முடியாது" என்று சந்திரசூட், வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.

Tags :
Chief JusticeDY ChandrachudLawyernews7 tamilSupreme court
Advertisement
Next Article