திடீரென மிரண்டு ஓடிய யானை - சிதறி ஓடிய பக்தர்கள்!
01:22 PM Feb 15, 2024 IST
|
Web Editor
Advertisement
கேரள மாநிலம் பாலக்காடு அருகே கோயில் திருவிழாவில் யானை மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement
அதிக அளவு வனப்பகுதியையும், மலைப் பகுதியையும் கொண்ட கேரள மாநிலத்தில் யானைகள் அதிகம் வளர்க்கப்படுவதும், அந்த யானைகள் கோயில் திருவிழாக்களில் அதிகம் பயன்படுத்தப்படுவதும் வழக்கம்.
அந்த வகையில் பாலக்காடு அருகே ஷோர்னூர் பகுதியில் உள்ள குறும்பா ஸ்ரீ \பகவதி அம்மன் கோயில் திருவிழாவில், சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியின் போது யானை பொதுமக்களுடன் சேர்த்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது.
இந்த நிலையில் யானை திடீரென மிரண்டு ஓடியதால், அதிர்ச்சியடைந்த பக்தர்கள் சிதறி ஓடிய நிலையில், சிலர் சிறு சிறு காயங்களுடன் தப்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Article