சரிவில் தொடங்கி இறுதியில் உயர்ந்த பங்குச் சந்தை!
வாரத்தின் முதல்நாளான இன்று சரிவில் தொடங்கிய பங்குச் சந்தை இறுதியில் உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளே சரிவில் தொடங்கிய பங்குச்சந்தை இறுதியில் உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 131.18 புள்ளிகள் உயர்ந்து 77,341.08-ஆகவும், தேசிய பங்குச் சந்தை 36.75 புள்ளிகள் உயர்ந்து 23,537.85-ஆகவும் காணப்பட்டது.
மஹிந்திரா & மஹிந்திரா, ஸ்ரீராம் பைனான்ஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன், சன் பார்மா, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், சிப்லா, இண்டஸ் இண்ட் பேங்க், அதானி போர்ட்ஸ், கோல் இந்தியா, டாடா ஸ்டீல், பவர் கிரிட், சன் பார்மா, நெஸ்லே, அல்ட்ராடெக் சிமெண்ட், என்டிபிசி, ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, டைட்டன், பஜாஜ் பின்சர்வ், பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின.
ஐசிஐசிஐ வங்கி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், கோத்ரேஜ் பிராப்பர்டீஸ், கம்மின்ஸ், ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி, சிஜி பவர், இந்தியன் ஹோட்டல்ஸ், பெட்ரோநெட் எல்என்ஜி, பாலிகேப் இந்தியா, ஆயில் இந்தியா மற்றும் சம்வர்தன மதர்சன் இன்டர்நேஷனல் உள்ளிட்ட சுமார் 300 பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 52 வார உச்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய சந்தைகள் லாபத்துடன் வர்த்தகமாயின. உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.41 சதவிகிதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 85.59 டாலராக உயர்ந்தது.