Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது!

10:29 AM Nov 18, 2023 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது. 

Advertisement

முதலில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கும் வகையில் 2 நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர், மறைந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.  மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் வேணு, வெங்கடசாமி, வேல்துரை ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.  இதேபோன்று என். சங்கரய்யா, பங்காரு அடிகளார் ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.

ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.  இதற்கான தீா்மானங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து பேசினார்.  அதைத் தொடா்ந்து, பேரவையில் முன்வரிசையில் இடம்பெற்றுள்ள எதிா்க்கட்சித் தலைவா்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிப்பாா்கள்.  அதன் பிறகு, சட்டத்திருத்த மசோதாக்கள் அனைத்தும் குரல் வாக்கெடுப்பு மூலம் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

Tags :
billsMK Stalinnews7 tamilNews7 Tamil UpdatesRN RaviTamilNadu Legislative AssemblyTN Govt
Advertisement
Next Article