Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘வீர தீர சூரன்’ படத்தின் படப்பிடிப்பு காட்சி வெளியானது!

விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் படத்தின் படக்காட்சியை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
06:49 PM Feb 26, 2025 IST | Web Editor
Advertisement

சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ‘வீர தீர சூரன்’. இதில் விக்ரம் உடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு தேனி ஈஷ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை சிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார்.

Advertisement

இரண்டு பாகமாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாக உள்ளது. மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கபட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக், டைட்டில் வீடியோ, டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இயக்குனர் அருண்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு ‘வீர தீர சூரன்’ படத்தின் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படம் மார்ச் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Tags :
Arun KumarVeera Dheera Sooranvikram
Advertisement
Next Article