Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சல்மான்கான் - ராஷ்மிகா நடிக்கும் 'சிக்கந்தர்' திரைப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடக்கம்! - படக்குழு அறிவிப்பு!

08:51 PM Jun 10, 2024 IST | Web Editor
Advertisement

சல்மான்கான் மற்றும் ராஷ்மிகா நடிக்கும் 'சிக்கந்தர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு  விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான 'தர்பார்'  திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய நிலையில் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியடையாததால் சினிமாவில் சில காலம் அவர் ஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு பிறகு பாலிவுட் நடிகர் சல்மான்கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் புதிய இந்தி திரைப்படம் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இது "புராணக் கதை' திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார். மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார்.

இதையும் படியுங்கள் : மோடி 3.0: மத்திய அமைச்சர்களாக பதவியேற்றவர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கீடு - முழுப் பட்டியல் இதோ!

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்க உள்ள புதிய திரைப்படத்துக்கு 'சிக்கந்தர்' எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் எனவும் சல்மான்கான் தனது எக்ஸ் இணைய தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது என்று இந்த திரைப்படத்தின் தயரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Tags :
ARMurugadossEID2025new moiverashmika mandanasajid nadiadwalasalman khansikandar
Advertisement
Next Article