Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மீண்டும் முடங்கிய சேவை... மன்னிப்பு கோரிய மைக்ரோசாப்ட் நிறுவனம்!

09:41 PM Jul 31, 2024 IST | Web Editor
Advertisement

மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டு, சுமார் 10 மணி நேரம் பயனர்கள் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் கடந்த 19 ஆம் தேதி சர்வதேச அளவில் முடங்கியது.  விண்டோஸ் பயனர்களின் சிஸ்டம்களில் ப்ளூ ஸ்க்ரீன் எரர் 'Blue Screen of Death (BSOD)' எனக் காட்டியது.  மென்பொருள் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்தான் கோளாறு ஏற்படுவதற்கு காரணம் என்பது தெரியவந்தது.  இதனால், விமான போக்குவரத்து, ஐடி நிறுவனங்கள் என பல துறைகளும் பாதிக்கப்பட்டன.

பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு இந்த பிரச்னை சீர் செய்யப்பட்டது. தகவல் தொழில் நுட்பத்தை சார்ந்தே தற்போது உலகில் பெரும்பாலான சேவைகள் நடக்கும் நிலையில் மைக்ரோசாப்ட் முடக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. மைக்ரோசாப்டில் ஏற்பட்ட இந்த பிரச்னை சரியாகி சில நாட்களே ஆன நிலையில், மீண்டும் சர்வதேச அளவில் மைக்ரோசாப்ட் சேவை பாதிக்கப்பட்டது.

மைக்ரோசாப்டின் 365 சேவைகள் மற்றும் அவர்றை அணுக முடியாத நிலை ஏற்பட்டது.  இதனால், மைக்ரோசாப்டின் 365 மற்றும் அதனுடன் இணைந்த கிளவுட் சேவைகள் மற்றும் azure Feautres-களை பயன்படுத்துவதில் பயனர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.  மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதை உறுதி செய்தது.  பயனர்களுக்கு சிரமத்தை குறைக்கும் விதமாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.  ஆனால், இந்த மாற்று ஏற்பாடும் சரிவர செயல்படவில்லை என்று கூறப்படுகிறது.  இந்த மைக்ரோசாஃப்ட் பிரச்னை சுமார் 10 மணி நேரம் நீடித்ததாகவும், மைக்ரோசாஃப்ட் சேவைகள் தொடர்பாக சுமார் பத்தாயிரம் பயனர்கள் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

மைக்ரோசாஃப்ட் அஸூர் கிளவுட் கம்ப்யூட்டிங் தளத்தின் இணையதளத்தில்  கூறப்பட்டிருப்பதாவது,  இது ஒரு விநியோக சேவை மறுப்பு (DDoS) தாக்குதலாக இருந்தபோதிலும், ஆரம்பகட்ட விசாரணைகள் எங்கள் பாதுகாப்பை செயல்படுத்துவதில் ஏற்பட்ட பிழையால் தாக்குதலைக் குறைப்பதற்கு பதிலாக அதிகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. நிலைமை மேம்பட்டு இருப்பதாகவும் விரைவில் முழுமையாக சீரடையும் என்று உறுதியளிப்பதாகவும் பயனர்கள் சந்தித்த பிரச்னைக்கு மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்துள்ளது.

Tags :
computercyber attackmicrosoft
Advertisement
Next Article