'மாஸ்க்' படத்தின் 2 வது பாடல் வெளியீடு...!
சின்னத்திரையில் பணியாற்றி வந்த கவின் கடந்த 2021 ஆம் வெளியான லிப்ட் திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளிவந்த டாடா, ஸ்டார் ஆகிய படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான கிஸ் திரைப்படம் கவலையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில் கவின் ‘மாஸ்க்’ என்னும் புதிய படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கும் இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகை ருஹானி ஷர்மா சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மாஸ்க் திரைப்படம் வரும் 21ம் தேதி வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து படக்குழு தீவிர புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனையொட்டி சமீபத்தில் இப்படத்தின் கண்ணுமுழி என்னும் பாடலும், படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் மாஸ்க் படத்திலிருந்து இதுதான் எங்கள் உலகம்’ என்னும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை ஆண்ட்ரியா , அனந்து, ஸ்மித் ஆஷர், அருள்பரன் வாஹீசன் ஆகியோர் பாடியுள்ளனர்