நாளை வெளியாகிறது ‘காதலிக்க நேரமில்லை’ இரண்டாம் சிங்கிள்!
‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் இரண்டாவது பாடல் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு, ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே காதல் கதையை மையாமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது. தற்போது வரை ‘என்னை இழுக்குதடி’ பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘லாவெண்டர் நேரமே’ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என இயக்குநர் கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார். விவேக் எழுத்தில் உருவான முதல் பாடலை இசைப்புயல் ஏஆர் ரஹ்மானும், பாடகி தீயும் பாடியிருந்தனர்.