பராசக்தி படத்தின் 2 வது பாடலான ‘ரத்னமாலா’ வெளியானது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மதராஸி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன்‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கும் இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பராசக்தி ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100வது படமாகும்.
2026 ஆம் ஆண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ந் தேதி 'பராசக்தி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனிடையே சமீபத்தில் வெளியான 'அடி அலையே' பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘பராசக்தி’ திரைப்படத்தின் 2-வது பாடலான ‘ரத்னமாலா’ வெளியாகியுள்ளது. ஜெயஸ்ரீ மதிமாறன் எழுதியுள்ள இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார்.