Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெளியானது ‘குட் பேட் அக்லி’  படத்தின் செகண்ட் லுக்.. இணையத்தில் வைரல்!

07:31 PM Jun 27, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் அஜித் குமார் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’  திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.  

Advertisement

நடிகர் அஜித் குமார்,  மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இதன் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.  ‘விடாமுயற்சி’ திரைப்படத்திற்குப் பின் நடிகர் அஜித்,  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

இப்படத்திற்கு,  ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிட்டுள்ளனர்.  இதன், போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றதுடன் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.  மேலும், குட் பேட் அக்லியின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.  இதில் நடிகர் அஜித்தின் காட்சிகள் எடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜித் அஜர்பைஜான் சென்றார்.   இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.  இந்த நிலையில், இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.  இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Adhik RavichandranAjithkukmarGood Bad UglyVidaa Muyarchi
Advertisement
Next Article