தபால் வாக்குகளின் முடிவை முதலில் அறிவிக்க வேண்டும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவு அறிவிப்பதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
03:19 PM Sep 25, 2025 IST
|
Web Editor
Advertisement
தேர்தலின் போது தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவு அறிவிப்பதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில், "இதற்கு முன்னதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படாமல், EVM ல் பதிவான வாக்குகளை எண்ணி அனைத்து சுற்று முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் தபால் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
Advertisement
ஆனால் தற்போது புதிய நடைமுறையின்படி வாக்குப்பதிவு இயந்திரத்தின் இறுதிக்கு இரண்டு சுற்றுக்கு முன்பாக தபால் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். அதாவது மொத்தம் 20 சுற்றுகள் இருந்தால் 18வது சுற்று முடிந்தவுடன் தபால் வாக்கு முடிவை அறிவிக்க வேண்டும்.
அதன் பின்னரே அடுத்த EVMல் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நடைபெற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Next Article