Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘அமரன்’ ரிலீஸ் எப்போது? இன்று மாலை வெளியாகிறது அப்டேட்!

12:51 PM Jul 17, 2024 IST | Web Editor
Advertisement

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதி இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 21வது திரைப்படம் 'அமரன்'.  இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இதனை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.  இப்படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் “மேஜர் முகுந்த் வரதராஜன்” என்கின்ற ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும்,  தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.  இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இத்திரைப்படம் ஆகஸ்ட் 15 தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்தை செப்டம்பர் 27ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், 'அமரன்' திரைப்படத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதி இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Tags :
#rajkumarAmaranAmaran Release DateRaaj Kamal filmsRajkumar periasamyrelease dateSaipallaisivakarthikeyanSk21
Advertisement
Next Article