Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஆர்யன்” படத்தின் 2வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘ஆர்யன்’ படத்தின் 2வது பாடல் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
09:59 PM Oct 25, 2025 IST | Web Editor
விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘ஆர்யன்’ படத்தின் 2வது பாடல் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி ராட்சசன் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

இந்த நிலையில் விஷ்ணு விஷால் அறிமுக இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் ஆர்யன் என்னும் படத்தை தயாரித்து நடித்துள்ளார். இந்த படத்தில்  ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதன் படி படத்தில் டீசர், டிரெய்லர் மற்றும் முதல் பாடல்க ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது, ‘ஆர்யன்’ படத்தின் 2வது பாடல் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ‘ஆர்யன்’ படத்தின் 2வது பாடல்  நாளை மதியம் 12 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :
2ndSingleAryanCinemaUpdatelatestNewsVishnuVishal
Advertisement
Next Article