Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சற்று குறைவு…!

10:53 AM May 29, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.  

Advertisement

சென்னை கோயம்பேட்டில் மொத்த காய்கறிச் சந்தைகள் உள்ளன.  இங்கு,  பல்வேறு மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன.  வழக்கமாக கோடை காலம் தொடங்கியதும்,  நீர் பற்றாக்குறை,  கடும் வெப்பத்தால் பூக்கள் உதிர்வது போன்ற காரணங்களால் காய்கறி உற்பத்தி பாதிக்கப்படும்.  அதன் விளைவாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து,  அவற்றின் விலை கடுமையாக உயர்வது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு,  வரலாறு காணாத வெயில் அடித்த நிலையிலும் கனமழை பெய்து வந்தது.  இந்நிலையில்,  சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.

அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ ரூ.200 -க்கு விற்கப்பட்ட பீன்ஸ் இன்று ரூ.120 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிலோ ரூ.70 -க்கு விற்கப்பட்ட கேரட் இன்று ரூ.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.  வெண்டைக்காய் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல்,  இஞ்சி கிலோ ரூ.140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தக்காளி கிலோ ரூ.40 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.  முதல் ரக பூண்டு கிலோ ரூ.300 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு புடலங்காய் கிலோ ரூ.70 -க்கு விற்படை செய்யப்பட்ட நிலையில்,  இன்று ரூ.35 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
ChennaikoyambeduVegetableVegetable Price
Advertisement
Next Article