உயர்கிறது டொயோட்டா வாகனங்களின் விலை!
12:32 PM Mar 30, 2024 IST
|
Web Editor
அதன்படி வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் குறிப்பிட்ட ரகங்களுக்கு இந்த விலை உயர்வு இருக்கும். அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகள் மற்றும் செயல்பாட்டு செலவுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
டொயோட்டா நிறுவனம், அதன் குறிப்பிட்ட சில வாகனங்களின் விலையை, ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
Advertisement
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியச் சந்தையில் ஹேட்ச்பேக் பிரிவைச் சேர்ந்த க்ளான்ஸா முதல் பிரீமியம் எஸ்யுவி பிரிவைச் சேர்ந்த ஃபார்ச்சூனர் வரையிலான பல்வேறு ரக வாகனங்களை விற்பனை செய்கிறது. இந்த நிறுவனத்தின் கார்கள் ரூ.6.86 லட்சம் முதல் ரூ.51.44 லட்சம் வரையிலான விலைகளில் கிடைக்கும்.
இந்த நிலையில், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தங்களது கார்களின் விலைகளை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாட்டில் விற்பனை செய்யப்படும் நிறுவன கார்களின் விலைகளை 1 சதவீதம் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
Next Article