இன்றைய தங்கம் விலை என்ன தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து ஒரு கிராம் ரூ.6,790-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
இந்நிலையில், தங்கத்தின் விலை ஏறியும், இறங்கியும் வருவது வழக்கம். இதற்கிடையே கடந்த மாதத்தில் இருந்து தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்தது. தொடர்ந்து அதிகரித்து வரும் விலை ,நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படியுங்கள் ;ராகுல் காந்தி மீண்டும் இன்று தமிழகம் வருகை | தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகளை சந்திக்கிறார்!
அந்த வகையில், நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ. 6,855-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.600 அதிகரித்து ரூ.54,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.6,790-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் நேற்று ஒரு கிராம் ரூ. 89க்கும், ஒரு கிலோ ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்பட நிலையில், இன்று கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.89.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.