Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பூண்டு விலை கடும் உயர்வு - கிலோ ரூ.500-க்கு விற்பனை..!

08:37 AM Feb 05, 2024 IST | Jeni
Advertisement

வரத்து குறைவு காரணமாக சென்னையில் பூண்டின் விலை ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் ஒன்று பூண்டு. சைவம், அசைவம் என இரண்டிலுமே பூண்டின் தேவை காலத்திற்கும் மாறாதது. தமிழ்நாட்டில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பூண்டு பயிரிடப்பட்டாலும், மாநிலத்தின் பெரும்பான்மையான தேவையை ஈடுசெய்வதற்கு, மற்ற மாநிலங்களில் இருந்து பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டு மக்கள் பயன்படுத்தும் பூண்டு, பெரும்பாலும் மத்தியப் பிரதேசம், குஜராத்,
ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. ஆண்டுதோறும்
ஜனவரி மாத பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதி வரை பூண்டு அறுவடை
செய்யப்படும். பொங்கலுக்குப் பின்னர் வடமாநிலங்களில் இருந்து பூண்டு
மூட்டைகள் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

அண்மைக் காலமாக பூண்டின் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலையும் கடும் உயர்வை சந்தித்துள்ளது. தேவை அதிகமாக இருக்கும் நிலையில், வரத்து குறைவால், சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஒரு கிலோ பூண்டு ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டது. அதாவது சிறிய ரக பூண்டு கிலோ ரூ.250-க்கும், நடுத்தர ரக பூண்டு ரூ.300-க்கும், பெரிய ரக பூண்டு கிலோ ரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள் : பொது சிவில் சட்டம் - இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல்..!

இந்நிலையில், வடமாநிலங்களில் இருந்து வரும் பூண்டின் வரத்தும் குறைந்துள்ளதால், அதன் விலை உச்சம் தொட்டுள்ளது. சென்னையில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் பூண்டு கிலோ ரூ.500-க்கு விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த 15 நாட்களுக்கு பூண்டின் விலை குறைய வாய்ப்பில்லை என்றும், பின்னர் வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்தால் விலை குறையும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
ChennaiGarlicMARKETPriceHikeRateVegetable
Advertisement
Next Article