”ஆபரேஷன் சிந்தூர் குறித்த முன்னறிவிப்பு தவறு அல்ல, குற்றம்” - ஜெய்சங்கர் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த சமீபத்திய பேட்டியை கடந்த ஞாயிற்றுக் கிழமை(மே.17) மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில் பகிந்தார்.
அவர் பகிர்ந்த அந்த வீடியோவில், பாகிஸ்தானின் ராணுவ முகாம்கள் குறிவைக்கப்படவில்லை, பயங்கரவாத முகாம்களை மட்டுமே இந்தியா தாக்கியதாக வெளியுறவுத்துறை அமைச்சர் செய்சங்கர் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து ராகுல் காந்தி அந்த பதிவில், “தாக்குதல் குறித்து முன்பே ஜெய்சங்கர் பகிர்ந்துள்ளார். இதன் விளையாக இந்தியாவின் எத்தனை போர் விமானங்கள் பாகிஸ்தானால் வீழ்த்தப்பட்டது?” என்று அவரது பேச்சை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பி இருந்தார். தொடர்ந்து ராகுல் காந்தியின் இந்த கருத்து தவறானது, இது ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு நடந்தது என பத்திரிகை தகவல் பணியகத்தின் தகவல் சரிபார்ப்புக் குழு கூறியது.
இந்த நிலையில் மீண்டும் ஜெய்சங்கரை ராகுல் காந்தி சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அவர் மெளனமாக இருப்பது மோசமானது. நான் மீண்டும் கேட்கிறேன், பாகிஸ்தானுக்கு கிடைத்த தகவலால் எத்தனை விமானங்களை நாம் இழந்தோம்? இது ஒரு தவறு அல்ல, குற்றம். உண்மையை நம் நாட்டு தெரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூரின்போது இந்தியாவின் ஐந்து போர் விமாங்களை பாகிஸ்தான் தெரிவித்தது. இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.