Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இணையத்தில் வைரலாகுல் நான் வயலன்ஸ் படத்தின் போஸ்டர்!

04:36 PM May 29, 2024 IST | Web Editor
Advertisement

நான் வயலன்ஸ் படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா.  இத்திரைப்படத்தில் பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.   இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹாவுக்கு பெற்றார்.  இதனையடுத்து பாபி சிம்ஹா மகான்,  சாமி 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதனிடையே தற்போது அவர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் பாபி சிம்ஹா,  மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்துக்கு 'நான் வயலன்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.  இத்திரைப்படத்தில் யோகிபாபு, மெட்ரோ ஷிரிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  இப்படத்தை ஏ.கே. பிக்சர்ஸ் தயாரிக்கிறது.  இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் நான் வயலன்ஸ் படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags :
Ananda Krishnanbobby simhaNon ViolenceYogi Babu
Advertisement
Next Article