திருடுபோன ஆசை சைக்கிள்.. கதறி அழுத பள்ளி மாணவன்.. சொந்த செலவில் சைக்கிள் வாங்கி தந்த காவல் ஆய்வாளர்!
விழுப்புரம் அருகே ஆசை ஆசையாக வாங்கிய சைக்கிள் திருடு போனதால் கதறி அழுத பள்ளி மாணவனுக்கு புது சைக்கிள் வாங்கி கொடுத்த காவல் ஆய்வாளர் சக்திக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் பகுதியில் டெம்போ டிரைவராக வேலை செய்து
வருகிறார் பாஜீதீன். இவரது மகன் அனாஸ் புதுவை கருவடிகுப்பத்தில் உள்ள அரசு உதவி
பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அனாஸ் தினமும் கோட்ட
குப்பத்திலிருந்து 5 கிலோமீட்டர் தூரம் உள்ள கருவடி குப்பத்திற்கு நடந்து சென்று வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பாஜீதீன் தனது மகனுக்கு புதிய சைக்கிள் ஒன்றை வாங்கி தந்துள்ளார்.
தனது சைக்கிள் காணாமல் போனதை கண்ட மாணவன் வீட்டுக்குச் சென்றால் தந்தை
திட்டுவார் அங்கேயே கதறிஅழுது கொண்டிருந்தான். இதனைக் கண்ட அப்பகுதியை
சேர்ந்த மக்கள் மாணவனை கோட்டக்குப்பம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
விட்டுச் சென்ற சைக்கிளை மர்ம ஒருவர் திருடி சென்றது சிசிடிவி காட்சிகளில்
பதிவாகியிருந்தது. பின்னர் இதுகுறித்து கோட்டகுப்பம் ஆய்வாளர் நடத்திய விசாரணையில், மாணவனின் தாய் வாய் பேச முடியாதவர் எனவும் தந்தை டெம்போ ஓட்டுநர் எனவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் மாணவனின் குடும்ப சூழ்நிலையை அறிந்த ஆய்வாளர் சக்தி தனது சொந்த
நிதியின் கீழ் மாணவனுக்கு புதிய சைக்கிள் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இந்த
மனிதாபமான செயலை கண்ட பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆய்வாளர்
சக்தியை பாராட்டி வருகின்றனர்.