Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பெரிய மாரியம்மன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற கம்பம் நடும் விழா!

08:25 AM Mar 24, 2024 IST | Web Editor
Advertisement

ஈரோட்டில் உள்ள புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் பொங்கல் குண்டம் தேர் திருவிழாவின் முதல் நிகழ்வான கம்பம் நடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Advertisement

ஈரோடு மாநகர் பகுதியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில்.  ஈரோட்டில் மேலும் சின்ன மாரியம்மன், கரை வாய்க்கால் மாரியம்மன், என பல கோயில்கள் உள்ளன. இத்திருக்கோயில்களின் பொங்கல் குண்டம் தேர் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகுவிமரிசையாக நடைபெறும். அந்த வகையில் கடந்த 21ஆம் தேதி இரவு பூச்சாட்டலுடன் தேர் திருவிழா தொடங்கியது. இதனைத்தொடர்ந்து நேற்று இரவு மூன்று கோயில்களிலும் கம்பம் நடும் விழா என்பது வெகு விமரிசையாக நடைபெற்றது.

கம்பங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அந்தந்த கோயில்களில் நடப்பட்டன. காவிரி ஆற்றில் இருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீரை கம்பத்தில் ஊற்றி பெண்கள் வழிப்பட்டனர்.  தொடர்ந்து பெரிய மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் பொருட்கள்
கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
ஏப்ரல் மாதம் 6ம் தேதி கம்பம் பிடுங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெறும்
என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
BakthidevoteesErodeKampam Nadum VizhaMariamman temple
Advertisement
Next Article