Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடுவானில் 15 நிமிடங்களில் 26,900 அடி கீழிறங்கிய விமானம்.. காதுவலியால் அவதியடைந்த பயணிகள்!

04:14 PM Jun 24, 2024 IST | Web Editor
Advertisement

தென்கொரியாவில் 35,000 அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்த பயணிகள் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 10 நிமிடங்களில் 8,900 அடிக்கு கீழ் இறங்கியதால் பயணிகள் காதுவலியினால் அவதிப்பட்டுள்ளனர். 

Advertisement

கடந்த சனிக்கிழமையன்று தென்கொரியாவின் இன்சியோன் (Incheon) நகரிலிருந்து KE189 என்ற போயிங் 737 ரக விமானமானது தைவானின் தாய்சுங் (Taichung) நகருக்கு 125 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட்ட 50 நிமிடங்களிலேயே அதன் அழுத்தக் கட்டமைப்பில் (pressurization system) கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் 15 நிமிட இடைவெளியில், விமானம் சுமார் 26,900 அடி கீழ் இறங்கியது என Flightradar24 தளம் கூறுகிறது. அதன் பின் விமானம் இன்சியோன் விமான நிலையத்துக்குத் திரும்பி அங்குத் தரையிறங்கியது. இந்த நிகழ்வு நடைபெறும்போது விமானம் Jeju தீவுக்கு மேல் பறந்துகொண்டிருந்ததாக Taipei Times தெரிவித்துள்ளது.

திடீரென விமானம் கீழ் இறங்கியதால் பயணிகள் அழுத்ததிற்கு உள்ளாகி அவர்களுக்கு காதுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காதுவலியால் பாதிக்கப்பட்ட 13 பயணிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags :
aircraftFlight KE189Korean Airlinespassengers
Advertisement
Next Article