Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வினேஷ் போகத்துக்கு வெள்ளி பதக்கம் கிடைக்குமா? இன்று இரவு தீர்ப்பு!

03:39 PM Aug 10, 2024 IST | Web Editor
Advertisement

வினேஷ் போகத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரிக்கப்பட்டு இன்றிரவு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Advertisement

33வது ஒலிம்பிக் போட்டியில், ஆகஸ்ட் 7ம் தேதி  நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் களமிறங்கி, ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்நிலையில், 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற வினேஷ் போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகம் இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த முடிவுக்கு எதிராக சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தை நாடியுள்ள வினேஷ் போகத், அரையிறுதியில் வெற்றி பெற்றதால் வெள்ளிப் பதக்கம் கோரியுள்ளார். இதனிடையே, என்னிடம் இனி போராட சக்தியில்லை என்று இந்திய வீராங்கனை வினேஷ் போகத்,  இன்று காலை மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்நிலையில், வினேஷ் போகத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று(ஆகஸ்ட் - 10ம் தேதி)  இரவு 9.30  விசாரிக்கப்பட்டு இன்றிரவுக்குள் தீர்ப்பு வழங்கப்படுமென சர்வதேச விளையாட்டு நீதிமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Tags :
Olympics2024ParisParis2024Paris2024OlympicParisOlympics2024VineshPhogatWrestling
Advertisement
Next Article