சண்டையை தடுக்க சென்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்!
உத்தரபிரதேசத்தில் சண்டையை தடுக்க சென்ற நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கவுதம புத்தா நகர் மாவட்டம் ரோசா ஜலால்பூர் கிராமத்தில் நேற்று ரவிகாந்த் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ரவிகாந்தின் பைக் முகேஷ் குமாரின் ஆட்டோ மீது மோதியது.
இதனால் ரவிகாந்த் மற்றும் முகேஷ் குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சாலையோரம் நடந்து சென்ற ராஜ்குமார் என்பவர் இவர்களின் சண்டையை தடுக்க சென்றார். வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரிடமும் சண்டையிட வேண்டாமென என்று ராஜ்குமார் கூறினார். அப்போது ராஜ்குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
அதனால் அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ராஜ்குமாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ராஜ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததுவிட்டதாக தெரிவித்தனர். உடனடியாக இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சண்டையை தடுக்க சென்ற நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.