Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கழுகாசலமூர்த்தி கோயிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது பங்குனி உத்திர திருவிழா!

08:49 AM Mar 15, 2024 IST | Web Editor
Advertisement

தென்பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்புப் பெற்ற கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் உள்ளது கழுகாசல மூர்த்தி திருக்கோயில். இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடத்தப்படும். அந்த வகையில் இந்தாண்டுக்கான  பங்குனி உத்தர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், பக்தர்களின் அரோஹரா கோஷத்துடன் கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் மாலை வேளைகளில் வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வரும் ஊர்வலம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் திருத்தேரோட்டம் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து 24 ஆம் தேதி தீர்த்தவாரி, தபசு நிகழ்ச்சியும், 25 ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

கொடியேற்று நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
#panguni uthiramBakthifestivalKalgakumalai Murugan TempleKalugasalamoorthy Temple
Advertisement
Next Article