Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காஸாவில் தொடரும் போர் | ஹமாஸ் தாக்குதலில் 9 இஸ்ரேலிய வீரர்கள் பலி!

07:06 AM Dec 14, 2023 IST | Web Editor
Advertisement

காஸாவில் ஹமாஸ் படையினர், நடத்திய தாக்குதலில் 9 இஸ்ரேலிய வீரர்கள் பலியாகியுள்ளனர்.

Advertisement

இஸ்ரேல் - காஸா  இடையே கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய போரானது இதுவரையிலும் தொடர்ந்து வருகிறது.  இஸ்ரேல், காஸா மீது தொடர் தாக்குதல்களை நடத்தி 18,000-க்கும் அதிகமான மக்களைக் கொன்று வருகிறது.  இத் தாக்குதல்களில் மருத்துவமனைகளும் குறிவைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

அதற்கு பதிலளித்த இஸ்ரேல்,  காஸா மருத்துவரனைகளை பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தி வருவதாக கூறியது.  அதைதொடர்ந்து, இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகளின் செயல்பாடுகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காஸாவில் ஹமாஸ் படையினர், நடத்திய தாக்குதலில் 9 இஸ்ரேலிய வீரர்கள் பலியாகியுள்ளனர். களச்சோதனையில் காணாமல் போன 4 வீரர்களை தேடிச் சென்ற இஸ்ரேலிய வீரர்கள் மீது மறைந்திருந்து ஹமாஸ் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் கூறப்படுகிறது.

Advertisement
Next Article