Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'தென்னிந்தியாவின் நயாகரா' அதிரப்பள்ளியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்! வைரலாகும் வீடியோ!

10:44 AM Jul 31, 2024 IST | Web Editor
Advertisement

கேரளாவில் பருவமழை பெய்து வருவதால், தென்னிந்தியாவின் நயாகராவான அதிரப்பள்ளி அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. 

Advertisement

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பருவமழை பெய்து வருகிறது. இதனிடையே கடந்த வாரத்திலிருந்து இந்த பருவமழை தீவிரமடைந்தது. இதனால் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கேரளாவில் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் வயநாட்டின் முண்டகை மற்றும் சூரல்மாலாவில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டு பல்வேறு வீடுகள், பாலம் மற்றும் சாலைகள் சேதமடைந்து. மேலும் 400 குடும்பங்களை 1000த்திற்கும் மேற்பட்டோர் இதில் சிக்கினர். நேற்றிலிருந்து இவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கேரளாவில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது. திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் சீறிப் பாய்ந்து செல்லும் மழை வெள்ளத்தால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலக்குடி ஆற்றின் கரையைக் கடந்தும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
Tags :
athirapally waterfallsHEAVY RAIN FALLKeralakerala landslideMonsoon RainNatural DisasterPray For WayanadWayanad
Advertisement
Next Article