ரீரிலீசாகும் “படையப்பா” படத்தின் புதிய டிரெய்லர் வெளியானது...!
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த் திரைத்துறையில் தனது 50 ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என இதுவரை 170 படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் மற்றும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ஆகியோர் இணைந்து நடித்து 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் படையப்பா.
மேலும் இப்படத்தில் சவுந்தர்யா, மணிவண்ணன், செந்தில், அப்பாஸ், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் வில்லி கதாபாத்திரத்தில் தோன்றிய ரம்யா கிருஷ்ணனின் நடிப்பான ஒரு டிரேட் மார்காக மாறியது. அன்றைய காலகட்டத்தில் படையப்பா திரைப்படம் 150 நாட்களைக் கடந்து, பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
இதனிடையே ரஜினிகாந்தின் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில் அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி, ரஜினியின்வெற்றித் திரப்படமான “படையப்பா” திரைப்படத்தை ரீரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ரீரிலீஸ் செய்யப்பட உள்ள படையப்பா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.