Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மொழியை திணிக்க கூடாது என்பதுதான் புதிய தேசிய கல்விக் கொள்கை” - மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி!

மொழியை திணிக்க கூடாது என்பது தான் புதிய தேசிய கல்விக் கொள்கை என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
04:27 PM Mar 09, 2025 IST | Web Editor
Advertisement

கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisement

அப்போது அவர் பேசியதாவது, “முன்னாள் அமைச்சர் வேலுமணி மகன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கிறேன். மகாராஷ்டிராவில் எண்ணற்ற தமிழர்கள் வாழ்கிறார்கள். பல்வேறு நகரங்களில் தமிழர்கள் மகிழ்வுடன் வாழ்கிறார்கள். அது ஒரு தேசிய உணர்வை நமது எல்லோருக்கும் ஏற்படுகிறது. அந்த வகையில் தேசிய உணர்வு மட்டும் தான் இந்திய தேசத்தையும் தமிழ்நாட்டின் நலனையும் காக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழ் மொழி வாயிலாக கற்க வேண்டும் என்பதைத் தான் புதிய தேசியக் கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டில் தமிழில் கல்வி கற்பது  மறைந்து வருகிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும்.

மும்மொழி கொள்கை என்று வரும் பொழுது மூன்றாவது மொழியாக எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம் என்று தான்  வகுக்கப்பட்டு இருக்கிறது. தவிர எந்த மொழியும் புதிய தேசிய கல்விக் கொள்கையின் வாயிலாக திணிக்கப்படவில்லை.  தமிழ்நாட்டை பொறுத்தவரை எல்லாமும் அரசியலாக்கப்படுவது என்பது சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது.

இந்தி திணிக்கப்படவில்லை, என்பது உண்மை அதற்காக ஒரு போராட்டம் நடத்தப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை. தொகுதி மறு வரையறையில் தமிழகத்தில் 309 தொகுதிக்கு கீழ் வந்த வரையறை இருக்காது என்பதை மத்திய கல்வித் துறை அமைச்சர் தெளிவுபடுத்துகிறார்கள் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி அரசியல் செய்வது தமிழ்நாட்டில் வாடிக்கையாக இருக்கிறது.

வடமாநிலத்தவர்கள் தமிழைத் தான் கற்றுக்கொள்ள வேண்டும், என்று எப்படி சொல்ல முடியும் இந்தியைத் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்ல முடியாத அரசாங்கம் தமிழை மட்டும் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்ல முடியாது. விரும்புபவர்களுக்கு அங்கு தமிழை கற்று தர முடியும் பிறமொழி வேண்டுமென்றால் அந்த பிறமொழி கற்றுத் தர முடியும்.

தேசிய கல்விக் கொள்கை என்பது  அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது தான். வட மாநிலத்தவர்கள் தமிழ் வேண்டுமென்றால் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படலாம்.  அவர்களுக்கு தமிழை திணிக்க முடியாது இங்கு இந்தி திணிக்கப்படக் கூடாது என்பதை போல் யார்? மீதும் மொழியை திணிக்க கூடாது. என்பது தான் புதிய தேசிய கல்விக் கொள்கை

பாலியல் துன்புறுத்தல் தமிழ்நாட்டில் பரவலாக இருந்து வருகிறது. இதற்கு அடிப்படை காரணம் போதைக்கு இளைஞர்கள் அடிமையாக இருப்பது தான். எனவே கஞ்சாவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

நான் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்தபோது தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரிக்கு கஞ்சா கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தினோம். எனவே தமிழ்நாடு அரசு இந்த போதைப்பொருள் கடத்தலை மிக கடுமையான நடவடிக்கை மூலமாக வேரறுக்க வேண்டும் அதுதான் பாலியல் துன்புறுத்தலுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது என்பதை போக்க இயலும்.

மொழி வேண்டாம், என்று சொல்வதே அரசியல் தான். எந்த மொழி யார் படிக்க வேண்டும் என்பதை மாணவர்கள் மத்தியில் விட்டுவிட வேண்டும் என்பது தான் புதிய கல்வி கொள்கை.  திராவிட இயக்கங்கள் எங்கே வளர்ந்தது என்று சொன்னால் வரலாற்றை மறந்து விட்டார்கள் என்று சொல்லலாம் திராவிட இயக்கம் வளர்ந்ததே மாணவர்களிடம் இருந்து தான்”

இவ்வாறு மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags :
C. P. RadhakrishnanCoimbatoreDelimitationnep
Advertisement
Next Article