Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“புதிய கல்விக் கொள்கை என்பது தேர்ச்சி அடையாத மாணவர்களை கூலி வேலைக்கு அனுப்பும் திட்டம்” - அப்பாவு விமர்சனம்!

புதிய கல்விக் கொள்கை என்பது தேர்ச்சி அடையாத மாணவர்களை கூலி வேலைக்கு அனுப்பும் திட்டம் என தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
04:05 PM Feb 21, 2025 IST | Web Editor
Advertisement

திருநெல்வேலியில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisement

அப்போது அவர் பேசிதாவது,

“2002ஆம் ஆண்டு கட்டாய கல்வி கொடுக்க வேண்டும் என்று சட்டம் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 60% மத்திய அரசும், 40% மாநில அரசும் நிதி ஒதுக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு ஏன் நிதி ஒதுக்கவில்லை என்பதைத்தான் கேட்கிறோம். கட்டாய கல்வி வேறு, புதிய கல்வி கொள்கை வேறு, பி எம் ஸ்ரீ திட்டம் வேறு.

ஆனால் இந்த மூன்றையும் ஒன்றாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார். மேலும் இதில் கையெழுத்திட்டால்தான் நிதி ஒதுக்குவோம் என்று கூறுகிறார். புதிய கல்விக் கொள்கை திட்டம் என்பது 3,5,8 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி அடையாத மாணவர்களை கூலி வேலைக்கு அனுப்பும் திட்டம் தான். பி எம் ஸ்ரீ ஸ்டிக்கரை தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் ஓட்டுவார்கள். அந்தப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வரை தமிழ் மொழியை கற்றுக் கொள்ளலாம். அதற்கு மேல் சமஸ்கிருதம், இந்தி கட்டாயமாக பயில வேண்டும் என்று கொண்டு வருகிறார்கள்.

இதன் மூலம் தமிழ் மொழியை அழிக்க பார்க்கிறார்கள். குறிப்பிட்ட சில காலத்திற்கு பின்பு நிதி தரவில்லை என்று கூறி பள்ளிகளை அதானி உள்ளிட்ட பெரிய நிறுவனங்களிடம் ஒப்படைத்து விடுவார்கள். கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் கொடுக்க வேண்டிய நிதியே தற்போது தராமல் இருக்கிறார்கள். இது சிறுபிள்ளைத்தனமானது. இந்தியை மட்டும் படிக்க வைத்து, தமிழை அழிக்கவே அந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது. வெளிநாடுகளில் தமிழை கற்றுக் கொடுப்பதற்கு இந்தியும், சமஸ்கிருதமும் தேவை என்று சொல்லுவது என்ன அர்த்தம்.

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியிருப்பவர்களை நாடு கடத்தும் திட்டத்தில் ஒருவர் கூட தமிழர் இல்லை என்பது பெருமிதம். அதிகமான கல்வி அறிவு உள்ளதால் தமிழர்கள் யாரும் சட்டவிரோதமாக குடியிருக்கவில்லை என்பது பெருமிதமான ஒன்று”.

இவ்வாறு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Tags :
AppavuEducationnew education policyPM Shri
Advertisement
Next Article