Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘தலைவர் 171’ படத்தின் பெயர் இதுவா? Vintage ரஜினிகாந்தை திரையில் காட்டுவாரா லோகேஷ்?

08:23 PM Mar 31, 2024 IST | Web Editor
Advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 171’ படத்தின் பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். எனவே லோகேஷ் தனது கேரியரில் 171 வது படத்தை இயக்க தேர்வு செய்தார். லோகேஷ் பெரிய ஹீரோக்களை வைத்து சினிமா பிரபஞ்சத்தை உருவாக்கி ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி வைத்து உள்ளார். இவரது இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ரசிகர்களிடம் இப்போதுதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைவர் 171 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள், ரஜினியை மீண்டும் ஒரு மாஸ் லுக்கில் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். தலைவர் 171 இல் ரஜினியின் பாத்திரம் எப்படி இருக்கும் என்று யூகங்கள் உள்ளன. இந்த படத்தில், ரஜினிகாந்த் மாஃபியா டான் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கக் கடத்தலை பின்னணியாக வைத்து இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார் லோகேஷ் என கூறப்படுகிறது. சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் எப்படிக் கடத்தப்படுகிறது என்பதை மையமாக வைத்து ‘தலைவர் 171’ படம் உருவாகும் எனத் தெரிகிறது.

இந்த படத்தின் ஏப்.22ஆம் தேதி பெயர் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஜினி - 171 படத்திற்கு ‘கழுகு’ எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், பான் இந்திய திரைப்படமாக இது உருவாகும் என்பதால், படத்தின் பெயரை ஆங்கிலத்தில் வைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளார்.

Tags :
AniruthLokesh KanagarajNews7Tamilnews7TamilUpdatesRajinikanthSuperstar RajinikanthThalaivar 171
Advertisement
Next Article