Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘#Vettaiyan’ படத்தில் ஃபஹத் ஃபாசில் கதாபாத்திரத்தின் பெயர் அறிவிப்பு..!

08:00 PM Sep 18, 2024 IST | Web Editor
Advertisement

வேட்டையன் திரைப்படத்தில் பேட்ரிக் என்ற கதாபாத்திரத்தில் ஃபஹத் ஃபாசில் நடிக்கிறார்.

Advertisement

மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர் ஃபகத் ஃபாசில். தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் படங்களில் நடித்துள்ளார். இந்திய அளவில் பிரபலமான நடிகராக இருக்கும் ஃபகத் ஃபாசிலின் வேட்டையன் படத்தின் கதாபாத்திர அறிமுக விடியோ வெளியாகியுள்ளது. ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் வேளையில், இத்திரைப்படம் வருகிற அக்.10 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. வேட்டையன் படத்தின் முதல் பாடல் ‘மனசிலாயோ’ சமீபத்தில் வெளியாகி 20 மில்லியன் (2 கோடி) யூடியூப் பார்வைகளைக் கடந்துள்ளது.

https://twitter.com/LycaProductions/status/1836397329756082293

துஷாரா விஜய் ‘சரண்யா’ கதாபாத்திரத்திலும், ரித்திகா சிங் ’ரூபா’ கதாபாத்திரத்திலும் நடிகை மஞ்சு வாரியர் ‘தாரா’ கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக படக்குழு விடியோ வெளியிட்டிருந்தது. தற்போது, ஃபகத் ஃபாசில் பாட்ரிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு விடியோ வெளியிட்டுள்ளது.

Tags :
Fahad FazilRana DaggubatiSuperstar RajinikanthVettaiyan
Advertisement
Next Article