Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தகுதியான வாக்காளர் பெயர் ஒருபோதும் விடுபட கூடாது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தகுதியான வாக்காளர் ஒருவர் பெயர் கூட வரவிருக்கும் வாக்காளர் பெயர் பட்டியலில் விடுபட்டு போய்விடக் கூடாது இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12:46 PM Nov 09, 2025 IST | Web Editor
தகுதியான வாக்காளர் ஒருவர் பெயர் கூட வரவிருக்கும் வாக்காளர் பெயர் பட்டியலில் விடுபட்டு போய்விடக் கூடாது இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Advertisement

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை மேற்கொள்வதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்ப்புகள் இருந்தபோதிலும் தேர்தல் கமிஷன் சிறப்பு திருத்த பணியை தொடங்கியது.

Advertisement

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மீண்டும் அமைத்திடக் கூடாது என்பதற்காக பாஜக பல்வேறு திட்டமிடல்களை செய்து வருகிறது. வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் என்ற எந்தவொரு நிறுவனத்தையும் நமக்கு எதிராக பயன்படுத்த தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். யார் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். களம் நம்முடையது தான்.

நான் விசாரித்த வரையில் பொதுமக்களிடம் எஸ்.ஐ.ஆர். குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. பல இடங்களில் BLOக்கள் எனப்படும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கே புரியவில்லை என சொல்கிறார்கள். தகுதியான வாக்காளர் ஒருவர் பெயர் கூட வரவிருக்கும் வாக்காளர் பெயர் பட்டியலில் விடுபட்டு போய்விடக் கூடாது.

அதே போல எந்தவொரு தகுதி இல்லாத வாக்காளரையும் பட்டியலில் இணைத்துவிட கூடாது. எஸ்.ஐ.ஆர். பணிகளில் மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்ஏ என்று தெரிவித்துள்ளார்.

Tags :
CHIEF MINISTERDMKeligible voterM.K. Stalinmeetingsir
Advertisement
Next Article