கோயிலுக்கு சென்ற முஸ்லிம் எம்எல்ஏ - கங்கை ஆற்று நீரை தெளித்து சுத்தப்படுத்திய கோவில் நிர்வாகம்..!
இஸ்லாமிய சட்டமன்ற உறுப்பினர் கோயிலுக்கு சென்றதால் கங்கை ஆற்று நீரை தெளித்து கோவில் நிர்வாகம் சுத்தப்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநில சித்தார்த் நகரில் இஸ்லாமிய சட்டமன்ற உறுப்பினர் வந்து சென்றதால், கோயிலை கங்கை ஆற்று நீர் தெளித்து புனிதப்படுத்தியதாக இந்து அமைப்பு நிர்வாகிகளும் குடிமை அமைப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
கோயிலில் நடக்கும் பூஜை ஒன்றிற்காக அப்பகுதி மக்களின் அழைப்பின் பேரில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சயீதா கஹூன் கோயிலுக்கு சென்றுள்ளார். அடுத்த நாள் அந்தப் பகுதியின் ஊராட்சி மன்ற தலைவர் தர்மராஜ் வெர்மா தலைமையில் கோயிலை கங்கை ஆற்று நீர் தெளித்து சுத்தப்படுத்தியுள்ளனர்.
இந்த விசயம் ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியது. இதனைத் தொடர்ந்து பேசிய சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சயீதா கஹூன் தெரிவித்ததாவது..